பக்கம் எண் :

411
 

ஐயாற்றிறைவரை வழிபட்டது :

காவிரியில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை விலக்கி ஐயாற் றிறைவனைச் சென்று வழிபட்டார் சுந்தரர். இதனைக் குறிக்கும் பகுதி.

"விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம்பரந்து நுரைசிதறி
அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ"

(தி. 7 ப. 77 பா. 9)

வழிப்பறிசெய்த பொருள்களை மீட்டது :

சுந்தரர் திருமுருகன்பூண்டி வழியாக வரும்போது வேடர்களால் பறிக்கப்பெற்ற பொருள்களை இறைவனை வேண்டிப் பெற்றார். இதனைக் குறிக்கும் பகுதிகள்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர

விரவ லாமைசொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு

ஆற லைக்குமிடம்

முடுகு நாறிய வடுகர் வாழ்முரு

கன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்

எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

(தி. 7 ப. 49 பா. 1)

"எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறைகொண்டு ஆறலைப்பாரிலை"

(தி. 7 ப. 92 பா. 3)

முதலையுண்ட பாலனை மீட்டது :

அவினாசியில் முதலையுண்ட பாலனைச் சுந்தரர் இறைவன் அருட்டுணைகொண்டு மீட்டருளினார். இதனைக் குறிக்கும் பகுதிகள்.

உரைப்பார் உரையுகந் துள்கவல்லார் தங்க ளுச்சியாய்
அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவினாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே.

(தி. 7 ப. 92 பா. 4)