வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளியூ ரிற்குளத்திடை இழியாக் குளித்த மாணி யென்னைக்கிறி செய்ததே. (தி. 7 ப. 92 பா. 2) "புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென்னைக்கிறி செய்ததே" (தி. 7 ப. 92 பா. 9) கயிலைக்கு எழுந்தருளியது: திருவஞ்சைக் களத்திறைவனிடம் சுந்தரர், உலக வாழ்வில் வெறுப்புற்றதை எடுத்துக்கூறி ஆட்கொண்டருள வேண்டினார். சிவபெருமான் தேவர்களை அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்துவரச் செய்தான். சுந்தரர் வெள்ளையானைமீது திருக்கயிலைக்குச் சென்றருளினார்.இதனைக் குறிக்கும் பகுதிகள்: "வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்" (தி. 7 ப. 4 பா. 8) "வானை மதித்தமரர் வலஞ்செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித்தான் மலைஉத்தமனே" (தி. 7 ப. 100 பா. 2) "விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளையானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே" (தி. 7 ப. 100 பா. 5)
"வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே"
(தி. 7 ப. 100 பா. 1) "துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே" (தி. 7 ப. 100 பா. 6)
|