பக்கம் எண் :

425
 


திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள்

ஏழாம் திருமுறை

1. திருவெண்ணெய்நல்லூர்

பதிக வரலாறு:

திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப்படுதற்கேதுவாக, பூக்கொய்ய வந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்த, பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத் தோன்றி நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவபெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழவேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு "நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று கட்டளையிட்டருளினார். அதுபோழ்து வன்றொண்டர் முன்பு இறைவனைப் "பித்தன்" என்று பேசிய சொல்லையே முதலாகக்கொண்டு பாடும்படி