பக்கம் எண் :

435
 
5.பாதம்பணி வார்கள்பெறு

பண்டம்மது பணியா

யாதன்பொரு ளானேன்அறி

வில்லேன்அரு ளாளா

 

பிறவுமாம். மானுடமாய்ப் பிறந்த ஞான்று முன்னை நிகழ்ச்சிகளை மறந்தமையும், அம்மறவியால், 'அடியேன் அல்லேன்' எனக் கூறியதும் இயற்கையாக நிகழற்பாலனவாகலின், அவை பொய்ம்மையாயினவாறு என்னையெனின், நம்மனோர் உள்ளத்திற்காயின் அவையேயன்றி மிகப் பெரிய பொய்களும் பொய்யல்லவாம்; சுவாமிகள் உள்ளத்திற்கு அவை பொய்யாகாதொழியா. "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்" (குறள் - 433) என்றருளியது, சுவாமிகள் போலும் உயர்ந்தோரை நோக்கியன்றோ!

'உரைத்தேனை' என இறந்த காலத்தால் அருளாது, "உரைப்பேனை" என எதிர்காலத்தால் அருளினார், அவைபோலும் செயல்கள் இனி நிகழா என்றல் எவ்வாறு கூடும் என்னும் திருவுள்ளத்தினால். இவ்வாறு, அறியாமையால் பிழை செய்தல் உயிர்கட்கும், அதனை அருளால் பொறுத்துக் கொள்ளுதல் உனக்கும் இயல்பு என்பார், "கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ" என்று அருளிச் செய்தார்.


"தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே"

(தி. 2 ப. 64 பா. 1)

எனவும்,

"பிழைத்ததெலாம் பொறுத் தருள்செய் பெரியோய்

"(தி. 6 ப. 31 பா. 5)

எனவும்,

"வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே" (தி. 8 திருவா. 24. 2) எனவும் ஆசிரியர் எல்லாரும் இவ்வாறே அருளிச் செய்தல் காண்க.

5. பொ-ரை: அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,