| தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | ஆதீஉனக் காளாய்இனி | | அல்லேன்என லாமே. | | 5 |
6. | தண்ணார்மதி சூடீதழல் | | போலுந்திரு மேனீ | | எண்ணார்புர மூன்றும்எரி | | யுண்ணநகை செய்தாய | | மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | அண்ணாஉனக் காளாய்இனி | | அல்லேன்என லாமே. | | 6 |
'அடியவன் அல்லேன்' என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.
கு-ரை: பேற்றை, "பண்டம்" என்று அருளினார். 6. பொ-ரை: தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! கு-ரை: 'திருமேனி' என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. 'மண்ணுதல்' என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், 'மண்' என நின்றது. இவ்வாறன்றி, 'நிலத்தின்கண் நிறைந்த' என்று உரைத்தலும் ஆம். 'அண்ணால்' என்பது, 'அண்ணா' என மருவிற்று.
|