7. | ஊனாய்உயி ரானாய்உட | | லானாய்உல கானாய் | | வானாய்நில னானாய்கட | | லானாய்மலை யானாய் | | தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | ஆனாய்உனக் காளாய்இனி | | அல்லேன்என லாமே. | | 7 |
8. | ஏற்றார்புரம் மூன்றும்மெரி | | யுண்ணச்சிலை தொட்டாய் | | தேற்றாதன சொல்லித்திரி | | வேனோசெக்கர் வான்நீர் |
7. பொ-ரை: பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! கு-ரை: 'ஊன்' என்றதும், ஆகுபெயராய், உடம்பையே குறித்து நின்றது. 'ஊன் ஆய்' எனப் பிரித்து, உயிருக்கு அடையாக்குக. இவ்வாறன்றி, "ஊன்" என்றது பொதுமையில் நின்று, சத்ததாதுக்களை உணர்த்திற்று என்றலுமாம். வானமும் நிலமுமாயினமையை அருளவே, இடைநின்ற ஏனைய பூதங்களாயினமையும் கொள்ளப்படும். இங்ஙனம் எல்லாமாய் நின்றமையை ஓதியது, 'எல்லாவற்றையும் உடைய பெரியோனாகிய உனக்கு ஆளாதலினும் சிறந்த பேறு ஒன்று உளதோ! அப்பேறு எனக்குக் கிடைத்திருக்கவும், அதன் பெருமையறியாது இகழ்ந்தமை பொருந்துமோ' என்பதைத் தெரிவித்தற் பொருட்டாம். "ஆனாய்" என்றது, என்றும் உறைதலை அருத்தாபத்தியான் உணர்த்திற்று. 'பொருந்தினவனே' என்றும் ஆம். இனி, "ஆனாய்" என்பதற்கு, 'இடப வாகனத்தை உடையவனே' என்றும் உரைப்பர். 8. பொ-ரை: பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு
|