பக்கம் எண் :

438
 
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

ஆற்றாய்உனக் காளாய்இனி

அல்லேன்என லாமே.

8

9.மழுவாள்வலன் ஏந்தீமறை

யோதீமங்கை பங்கா

தொழுவாரவர் துயராயின

தீர்த்தல்லுன தொழிலே

செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

அழகாஉனக் காளாய்இனி

அல்லேன்என லாமே.

9

 

வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

கு-ரை: சிவபெருமான், திரிபுரத்தை நகைத்தெரித்தமையால், "சிலை தொட்டாய்" என்றது போர் செய்வாரது தன்மை பற்றி வந்த பான்மை வழக்கு. 'தேவரும், மக்களும் ஆகிய எல்லார்க்கும், அவர் வேண்டியவற்றை அருள்செய்யும் அருளாளனாகிய, உனக்கு ஆளாகி யதனை மறுத்துைரைத்தேன்' என இரங்கிக் கூறுவார், திரிபுரம் எரித்தமையையும், பகீரதனுக்காகக் கங்கையைத் தாங்கினமையையும் எடுத்தோதியருளினார். சொல்லுவாரது தேற்றாமை, சொன்மேல் ஏற்றப்பட்டது. 'செக்கர்' என்பது ஆகுபெயராய், சடையைக் குறித்தது.

9. பொ-ரை: மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது