10. | காரூர்புன லெய்திக்கரை | | கல்லித்திரைக் கையால் | | பாரூர்புக ழெய்தித்திகழ் | | பன்மாமணி யுந்திச் | | சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் | | நல்லூரருட் டுறையுள் | | ஆரூரன்எம் பெருமாற்காள் | | அல்லேன்என லாமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! கு-ரை: இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். சுவாமிகள் தாம் முன்பு தொழுது வேண்டினவாறே ஆள வந்த திருவருளின் திறத்தை நினைந்து கசிந்தருளிச் செய்தவாறு. மழுவாள், இரு பெயரொட்டு. மழுவேந்துதல் முதலியனவும், தொழுவாரது துயர் தீர்த்தலைக் குறிக்கும் குறிப்புக்களாம். 10. பொ-ரை: மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! கு-ரை: இத்திருப்பாடல் தம்மைப்பிறர் போலவும், இறைவனைப் படர்க்கையிலும் வைத்து அருளிச் செய்த திருக்கடைக்காப்பு. இதனையும் முன்னைத் திருப்பாடல்களோடு ஒத்த முறையிலே அருளிச் செய்தார். 'இறைவனுக்கு முன்பே ஆளாகிய யான், அவ்வாறு ஆளாகாத பிறர்போல, 'ஆளல்லேன்' என முரணிக் கூறியது பொருந்துமோ' எனப் பிறரை நோக்கி வினவித் தம் செய்தியைப் புலப்படுத்தும் முகத்தால், 'நீவிரும் எனது வரலாற்றை உணர்ந்து, இப்பதிகத்தை ஓதின், அவனுக்கு ஆளாகி உய்வீர்' என அருளுதற் பொருட்டு.
|