2. திருப்பரங்குன்றம் பதிக வரலாறு: சுந்தரமூர்த்திசுவாமிகள் முப்பெரு வேந்தர்களோடும் மதுரை மாநகரில் திருவாலவாயுடையாரை வணங்கி, திருவாப்பனூர், திருவேடகம் முதலான பதிகளைப் பணிந்து மீண்டும் மதுரை மாநகரில் மகிழ்ந்திருக்கும் நாள்களில் பார்த்திபரோடும் திருப்பரங்குன்றில் பரமரைப் பணிந்து அவர்கள் முன்னே பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 கழறிற்றறிவார் புராணம். 102-103) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவற்குப் பணிசெய்தற்கு, இறைவற்கும் உயிர்கட்கும் உள்ள பெருமை சிறுமைகளை உணர்த்துதற் பொருட்டு, இறைவனை உள்ளுறைச் சிறப்பு வகையால் (பழிப்பது போலப் புகழ்தல் வகையால்) பாடியருளியது. பண்: இந்தளம் பதிக எண்: 2 திருச்சிற்றம்பலம் 11. | கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர் | | உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச் | | சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ் | | சிலபூதமும் நீரும் திசைதிசையன | | சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும் | | மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந் | | தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம | | படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. | | 1 |
1. பொ-ரை: இறைவரே, நீர், பெரிய மலையையும், சுரத்தையும் கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர் எருது. மண்மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும், அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும், 'சோத்தம்' எனச் சொல்லி வணங்குமாறு, நீர் அரையிற் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு;
|