பக்கம் எண் :

441
 
12.முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்

முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்

கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்

கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்.

 
அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

கு-ரை: வருவித்துரைத்தன சொல்லெச்சங்களும் இசையெச்சங்களுமாம்; இவ்வாறு உரைப்பனவற்றைப் பின்னரும் அறிந்து கொள்க.

கோ திட்டை - மிக்க மேட்டு நிலம்; கோ வல் - மிக்க வன்னிலம், இவை இரண்டும் உடனிலை (சிலேடை) வகையால், மலையையும், சுரத்தையும் குறித்து, அஞ்சுதற் காரணத்தைத் தோற்று வித்தன. 'பரங்குன்று' என்பதும் 'கோவலூர்' என்பதும் இவற்றின் உண்மைப் பொருள். பரங் குன்று - மேலான மலை; கூடற் குடவயின் நிற்றலின் மேலதாயிற்றுப் போலும்!

'சில்லை' என்பது, 'தொல்லை, வெள்ளை' என்பனபோல, ஐகார ஈற்றுப் பண்புப் பெயர். சிறுமையை, 'சின்மை' என்றல் பான்மை வழக்கு. அஃது ஈண்டு, இளமைமேல் நின்றது. 'சே' திட்டு, 'குத்தி' எனப் பிரிக்க. திட்டு - மேடு. நீர் - நீர்மை; குணம்; அஃது ஈண்டு, செயலைக் குறித்தது. 'பூதங்கள் வாளா சூழ்கின்றன வில்லை' என்பார். "பூதமும் நீரும்" என இரண்டாக்கி அருளினார். அடுக்கு, பன்மை பற்றி வந்தது. 'சோத்தம்' என்பது, தாழ்ந்தோர், உயர்ந்தோரிடத்துக் கூறும் வணக்கச் சொல்; அஃது அம்மின்றி, 'சோத்து' எனவும் வழங்கும். அவை, தாழ்ந்தோர் செய்யும் வணக்கத்திற்குப் பெயராயும் நிற்கும்.

இது முதல், மூன்று திருப்பதிகத் திருப்பாடல்களைச் சிலர். எல்லாச் சீர்களும் மாச்சீராகி வர, ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர் உடையதாமாறு சீர் அறுப்பர். சுவாமிகள், இதன் ஆறாம் திருப்பாடலுள் "தென்னாத் தெனாத் தெத்தெனா" எனச் சீர் அறுத்து அருளினமையை அவர்நோக்கிற்றிலர். எவ்வாறு சீர் அறுப்பினும், இத் திருப்பாடல்களுள் ஒற்றுக்களும், குற்றியலுகரமும் அலகுபெறா தொழிதல் பெரும்பான்மையாம்.

2. பொ-ரை: இறைவரே, அடியோங்கள் 'பெரியாரொடு நட்டல் இன்பந் தருவது' என்று கருதியிருப்பேமே ஆயினும், நீர் தலைமாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள