பக்கம் எண் :

442
 
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்

பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்

அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

2

13.மூடாய முயலகன் மூக்கப்பாம்பு

முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்

பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல்

பரிசொன்றறி யாதன பாரிடங்கள்

 

சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இவ்வண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர், அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லேம் அல்லேம் ஆதலின், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

கு-ரை: "பெரியாரொடு நட்பு இனிதென் றிருத்தும்" என்பதனை முதற்கண்ணும், "அண்டங்கடந் தப்புறத்தும் இருந்தீர்" என்பதனை, "நஞ்சை உண்டீர்" என்பதன்பின்னும் வைத்துரைக்க. பின்னரும் இவ்வாறு மாற்றியுரைக்கற்பாலனவற்றை, பொழிப்புரை பற்றி அறிந்துகொள்க.

முண்டம்-தலை. இங்குத் தலைமாலை. முதுகாடு, புறங்காடு' என்பன, 'இடுகாடு, சுடுகாடு' இரண்டற்கும் பொதுவாய பெயர்கள். மெய்யின் முழுமை, நீற்றின்மேல் ஏற்றப்பட்டது. 'மூர்க்கப்பாம்பு' என்பது மருவி நின்றது. முண்டம் தரித்தல் முதலியன, இறப்பிற்கு அஞ்சுவார்க்கு அச்சம் விளைப்பனவாதலும், அண்டங்கடந்து இருப்பவரோடு கூடுதல், பிண்டத் தொடு நிற்பார்க்கு இயல்வதன்று ஆதலாலும் "பிண்டம் சுமந்தும் மொடுங் கூடமாட்டோம்' என்று அருளிச் செய்தார். 'சுமத்தலால்' என்பது, 'சுமந்து' எனத் திரிந்துநின்றது, "அஃதாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து" (குறள். 1032). என்பதிற்போல. 'இவ்வுடம்பு கொண்டு உம்மை அணுகுதல் இயலாது' என்பது உள்ளுறைப் பொருள். உம்மைகள், சிறப்பும்மைகள்.

3. பொ-ரை: எம்பெருமானிரே, இறைவரே, உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடை நாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித்