பக்கம் எண் :

443
 
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந்

துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்

றாடாதன வேசெய்தீர் எம்பெருமான்

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

3

14.

மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி

மலையான்மடந் தைமண வாளநம்பி

பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா

ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்

நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த

நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்

கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

4



திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை, தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை, இதழ் நிறைந்த கொன்றைமலரும், எருக்கம்பூவுமாம். இவற்றோடு அரையில், பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக் கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர்; அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

கு-ரை: 'மூடன்' என்பதனை, 'மூடு' என்று அருளினார். 'மூள் தாய' எனப் பிரித்து, 'சினங்கொண்டு தாவிய' என்று உரைத்தலும் ஆம். திணை விராய் எண்ணியவற்றிற்கு, பன்மை பற்றி அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது. கொன்றைப் பூவும், எருக்கம் பூவும் உலகர் விரும்பாதன. துணை - மாலை. 'அடாதன' என்பது, நீட்டலாயிற்று. "எம்பெருமான்" என்றது, பன்மை ஒருமை மயக்கம்.

4. பொ-ரை: இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், பெருத்த ஊற்றினிமை பொருந்திய தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். நீர் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருஞான்றும் அப்பாற்போக