விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம். கு-ரை : மஞ்சு - மேகம். மாலைக் காலத்தில் மேகம் எழுதல் இயல்பாதலால், 'மஞ்சுண்ட மாலை' என்று அருளினார். 'மேகம் சூழ்தற்குரிய மதி' என்றும் ஆம். "பஞ்சு" என்றது, கருவியாகு பெயர். 'அல்குல்' என்பது. 'பிருட்டம்' என்னும் வடசொற் குறிக்கும் பொருளையே குறிப்பது. அதனால், தொல்காப்பியர் முதலாகச் சங்கத்துச் சான்றோர் பலரது செய்யுட்களுள்ளும், திருமுறைகளாகிய அருளாசிரியர்களது திருமொழிகளுள்ளும் இச்சொல் காணப்படுவதாம். இதன் பொருளை இனிது விளக்கவே போலும், குமரகுருபர அடிகள், தமது சிதம்பரச் செய்யுட்கோவையில் இறைவனது, 'மாதிருக்கும் பாதியன் (அர்த்த நாரீசுவரன்)' ஆகிய வடிவத்தை வியந்து பாடிய, "ஒருவனும் ஒருத்தியுமாய வடிவத்தை, 'ஒருவர்' என்ற ஒருசொல் இல்லாவிடில் எப்படிக் குறிப்பது?" என்ற ஒரு செய்யுள் போலவே, மற்றொரு செய்யுளில் (பா. 73), | செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும் வெண்மதிச் | | சென்னியற்கும் | | ஒவ்வாத் திருவுரு ஒன்றே யுளதவ் | | வுருவினைமற் | | றெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின் | | னருட்புலியூர் | | பைவ்வாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று | | பாடுதுமே. | | -சிதம்பரச் செய்யுட் கோவை 73 |
என்று நயம்படக் கூறினார்! 'எந்தாய்' என்பது, 'எம் தாய்' எனப் பிரிக்கப்பட்டு, அண்மை விளியாய், 'எமக்குத் தாயே' எனப் பொருள் தந்து அம்மைக்கும், 'எந்தை' என்னும் முறைப்பெயரின் ஈறு விளியேற்குமிடத்து 'ஆய்' எனத் திரிந்ததாகக் கொள்ளப்பட்டு, 'எமக்குத் தந்தையே' எனப் பொருள் தந்து, அப்பனுக்கும் பொருந்துதல் காண்க. இதனால், 'அல்குல்' என்பது ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் உள்ள உறுப்பேயாதல் இனிது விளங்குவதாம். இன்னும் மேற்காட்டிய செய்யுளில், 'பையரவல்குல்' என உவமத்தொடுபுணர்ப்பினும் ஆடவர்க்கு உரித்தாதல் குறிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. வரலாற்று முறையின் வந்த பண்டைக் கல்வியையுடைய நூலாசிரியரது நூல்கள், உரையாசிரியரது உரைகள், அண்மைக் காலத்துப் புலவரது செய்யுள்கள் உள்ளிட்ட
|