15. | பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர் | | புலால்வாயன பேயொடு பூச்சொழியீர் | | எல்லாம்அறி வீர்இது வேயறியீர் | | என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும் | | கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங் | | கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும் | | அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான் | | அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே. | | 5 |
எல்லாவற்றிலும் இஃது இனிது விளங்கிக் கிடக்கும் இடங்கள் பலவற்றையும் ஈண்டு எடுத்துகாட்டின், பெரிதும் இயைபின்றிச் செல்வதாம். இவ்வாறாகவும், சிலர் இச்சொல்லை இடக்கர்ப் பொருளுடையதாகக் கொண்டு, 'இதனைக் கூறுதல் உயர்ந்தோரது பண்பிற்கு ஒத்ததாதல் எங்ஙனம்!' என மலைவர். அதனோடமையாது, கலித்தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில், "கோடுயர் அகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள்" என்பதனை, "கோடுயர் அகல்குறிக் கொடி புரை நுசுப்பினாள்" எனத் திருத்தி, குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டாற்போல, குற்றங் களையப் புகுந்து, இல்லாத குற்றத்தைக் கொணர்ந்து தாம் குற்றப் பட்டாருமுளர். அத் திருத்தஞ் செய்தார் கொண்ட பொருளைப் புகழ்ந்து கூறும் வழக்கு, நல்லாசிரியரிடத்து யாண்டும் இல்லையென்றுணர்க. 5. பொ-ரை: எம்பெருமானிரே, இறைவரே, நீர், பொல்லாங்குடை மயானத்தில் ஆடுதலைத் தவிரீர்; அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; 'எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலிரே' என்று, உம் அடியவனாகிய யான், இரவும் பகலும் கவல்வேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியக் கோலமாகக் கண்டதும், மற்றொருநாள் கடம்பூர்க் கரக்கோயிலில் இலிங்க மூர்த்தியாகக் கண்டதும் தவிர, பிறிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதிலம் அதனால், அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
|