85. | தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ் | | சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர் | | சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித் | | தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால | | முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் | | முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி | | அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை | | அழகார்திருப் புத்தூர் அழகனீரே. | | 3 |
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ (தி.8 திருவா - திருச்சா - 18) நீற்றினை நிறையப்பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறையவிட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே
(தி. 4. ப. 64 பா.8) என்னும் திருவாக்குகளால் அறிக. இச்செய்யுள் அடிகளின் முதற்சீர் கனிச்சீராகாது, விளச்சீராய் வந்தது சீர்மயக்கம் என்க. நான்கு ஆறாம் திருப்பாடல்கட்கும் இஃது ஒக்கும். 3. பொ-ரை: கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே, நீர், ‘எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா’ ஆகிய எல்லாப் பொருள்களுமானீர். ஆதலின், ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.
|