137. | நாச்சில பேசி நமர்பிற ரென்று | | நன்றுதீ தென்கிலர் மற்றோர் | | பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் | | புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப் | | பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் | | பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர் | | பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் | | இவரலா தில்லையோ பிரானார். | | 4 |
138 | வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை | | வாட்டிய வகையின ரேனும் | | புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை | | போகும்நாள் வீழும்நா ளாகிப் | | பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் | | தடிகள்தாம் யாதுசொன் னாலும் | | பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் | | இவரலா தில்லையோ பிரானார். | | 5 |
4. பொ-ரை: மனமே, பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும், நீர் நிறைந்த பொய்கைகளையுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம், சிலரை, ‘நம்மவர்’ என்றும், சிலரை, ‘பிறர்’ என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும். அவர் சொல்வனவற்றைத் தாம், ‘நன்று’ என்று புகழ்தலாதல், ‘தீது’ என்று இகழ்தலாதல் செய்தலும் இலர். மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை. ஆயினும், பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர். அதன்பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர்; ஒன்றைத் தருதலும் இலர்; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ! கு-ரை: முகமன் செய்தலை, ‘பூச்சு’ என்றல் வழக்கு. ‘தர’ என்னும் வினை எச்சம், தொழிற் பெயர்ப் பொருள் தந்தது. 5. பொ-ரை: கட்டப்பட்ட வெவ்விய வில்லால், வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வண்கண்மையை உடையவராயினும்,
|