139. | செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் | | தீவினை செற்றிடும் என்று | | அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் | | ஆவதும் அறிவர்எம் மடிகள் | | படைத்தலைச் சூலம் பற்றிய கையர் | | பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் | | பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் | | இவரலா தில்லையோ பிரானார். | | 6 |
தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும், தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு, அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய, திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர், என்னளவில், யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது, நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ! கு-ரை: ‘பேர்வது‘ என்பது தொழிற் பெயர். அதன்பின், ‘உடையர்’ என்பது எஞ்சிநின்றது. 6. பொ-ரை: அடியேன், ‘பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும்’ என்று அஞ்சி, நன்றல்லாத் தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன்; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன்; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர். அங்ஙனமாக, என்னைப் புரத்தற்கு, படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை, பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ! கு-ரை: நன்றல்லாத தவமாவது, இறைவனை முதல்வனாக அறியாது, வினையையே முதலாக நினைத்து ஒழுகும் ஒழுக்கம், அதனையுடையவர் புத்தர், சமணர், மீமாஞ்சகர், தார்க்கிகர், சாங்கியர் என்போர். ‘அடித்தலம் அல்லால்’ எனப் பாடம் ஓதுதலும் ஒன்று. ‘ஆர்’, ‘பரமர்’ என்றன ஆகுபெயர்கள்.
|