பக்கம் எண் :

544
 
140கையது கபாலங் காடுறை வாழ்க்கை

கட்டங்க மேந்திய கையர்

மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்

வெண்டிங்கள் சூடிய விகிர்தர்

பையர வல்குற் பாவைய ராடும்

பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

மெய்யரே யொத்தோர் பொய்செய்வ தாகில்

இவரலா தில்லையோ பிரானார். 

7


141.நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்

நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்

கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்

கருத்தினாற் கைதொழு தெழுவேன்



7. பொ-ரை: கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும், காட்டில் வாழும் வாழ்க்கையினையும், ‘கட்டங்கம்’ என்னும் படையினை ஏந்திய கையினையும், மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும், அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை, சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு, பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: செய்யுட் கேற்றவாறு ஓதியருளினாராயினும், ‘கையிற் கபாலத்தர்; கட்டங்கத்தர்; காடுறை வாழ்க்கையர்; மெய்யிற் புரிநூலர்; சடைமேல் திங்களர்’ என்றுரைத்தலே திருவுள்ளம் என்க.

8. பொ-ரை: அடியேன், நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது, நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன்; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்; இவ்வாறாக, படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை, பிணம் பொருந்திய