பக்கம் எண் :

545
 
பணம்படும் அரவம் பற்றிய கையர்

பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்

இவரலா தில்லையோ பிரானார். 

8

142.குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே

குற்றேவல் நாள்தொறுஞ் செய்வான்

இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்

எம்பெரு மானென்றெப் போதும்

அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்

தடிகள்தாம் யாதுசொன் னாலும்

பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்

இவரலா தில்லையோ பிரானார். 

9



காட்டில் ஆடுவதேயாய்விடினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: ‘ஓரேன்’ என்றது. முற்றெச்சம், ‘நெஞ்சமே’ என்னும் ஏகாரத்தை மாற்றி உரைக்க. ‘கருத்து’ என்றது, அன்பின் மேல் நின்றது.

9. பொ-ரை: நெஞ்சே, நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய்; ஆயினும், தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர், இயல்பில் அன்பில்லாதவராயினும், தாம் கேட்டவாற்றால் வாயினால் எப்போதும், ‘சிவனே சிவனே’ என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின், அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார், யாது சொல்லி வேண்டினும், நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர்; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை;நீ என் செய்தியோ!

கு-ரை: தமது முறைப்பாட்டினை இத் திருப்பாடலில் நெஞ்சின் மேல் வைத்து அருளிச் செய்தார் என்க.