பக்கம் எண் :

546
 
143.துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்

தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்

மணிப்படு கண்டனை வாயினாற் கூறி

மனத்தினால் தொண்டனேன் நினைவேன்

பணிப்படும் அரவம் பற்றிய கையர்

பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்

பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்

இவரலா தில்லையோ பிரானார். 

10

144ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன்

அடியவர்க் கடியனு மானேன்

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்

ஒண்மலர்ச் சேவடி காட்டாய்

அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி

லாச்சிரா மத்தெந்தம் மடிகள்

பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்

இவரலா தில்லையோ பிரானார். 

11



10. பொ-ரை: வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும், நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும், மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து, அவற்றைக் கண்டால், அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து, வாயால் துதிப்பேன்; அவ்வாறாக, படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய, திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர், என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு, ஒன்றையும் ஈயாராயினும். அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!

கு-ரை: ‘காணில்’ என்றது, அடியவர் வேடத்தை யாதல் அறிக. ‘மணிப்படு கண்டன்’ என்றது பன்மை ஒருமை மயக்கம், பட்டுடை - முழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம். (சிந்தா. 468 நச். உரை.)

11. பொ-ரை: எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு