196. | காலமும் ஞாயிறு மாகிநின் | | றார்கழல் பேணவல்லார் | | சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் | | பார்அடி போற்றிசைப்ப | | மாலொடு நான்முகன் இந்திரன் | | மந்திரத் தால்வணங்க | | நீலநஞ் சுண்டவ ருக்கிட | | மாந்திரு நின்றியூரே. | | 9 |
197. | வாயார் மனத்தால் நினைக்கு | | மவருக் கருந்தவத்தில் | | தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் | | வானில்என்றும் | | மேயார் விடையுகந் தேறிய | | வித்தகர் பேர்ந்தவர்க்குச் | | சேயார் அடியார்க் கணியவர் | | ஊர்திரு நின்றியூரே. | | 10 |
கு-ரை: ஆறுதல் - அடங்குதல், 'உகந்து இட்டு ஆர் மலர்' என்க. 'இடுதலால்' என்பது, 'இட்டு' எனத் திரிந்து நின்றது. ஊண், முதனிலை திரிந்த தொழிற்பெயர். சிட்டம் என்பது, 'சிட்டு' எனக் குறைந்து நின்றது. 9. பொ-ரை: காலமும், அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும், தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும், செயல்களையும் கண்டு அவர்களை விரும்புகின்றவரும், நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு, அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் 'திருமால், பிரமன், இந்திரன்' முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும், திருநின்றியூரே இடமாய் நிற்கும். கு-ரை: சீலம் - ஒழுக்கம். அஃது அதற்கு அடியாகிய நோன்பின் மேல் நின்றது. 10. பொ-ரை: வாயார வாழ்த்தி, மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும்,
|