பக்கம் எண் :

590
 
198.சேரும் புகழ்த்தொண்டர் செய்கை

யறாத்திரு நின்றியூரிற

சீருஞ் சிவகதி யாய்இருந

தானைத் திருநாவல்ஆ

ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல்

லார்வினைபோய்ப்

பாரும் விசும்புந் தொழப்பர

மன்னடி கூடுவரே.

11

திருச்சிற்றம்பலம்



அரியதவக் கோலத்தை உடைய தூயவரும், வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும், இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும், தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே.

கு-ரை: 'போந்தவர்க்கு' என்பது பாடமன்று

11. பொ-ரை: திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய, பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், வினை நீங்கப் பெற்று, மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் வணங்கும் படி, சிவபெருமானது திருவடியை அடைவார்கள்.

கு-ரை: "சீரும்" என்பது, 'சீர்' என்பது அடியாகப் பிறந்த பெயரெச்சம். 'சிவகதி' என்பது வாளா பெயராய், 'வீடுபேறு' என்னும் பொருளதாய் நின்றது.

 

சங்கற்ப நிராகரணம்

வீட்டியுயிர் முன்முதல தான்விழுங்கும் பாலகனை
மீட்டவனைத் தாள்பணிவோமே.

- உமாபதிசிவம்