பக்கம் எண் :

591
 

20. திருக்கோளிலி

பதிக வரலாறு:

திருத்தொண்டத்தொகையருளித் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் நம்பியாரூரரிடத்தில் அளவற்ற அன்புடையவராய குண்டையூர்கிழார் செந்நெல் பருப்பு முதலிய பொருள்களை முட்டாமல் கொடுத்துவந்தார். வானம் முறை வழங்காமல் மாநிலம் வளஞ்சுருங்கியது. அதனால் சுந்தரருக்குப் பொருள்கள் வழங்கமுடியாமல் குண்டையூர்கிழார் வருந்தி இரவு உணவு உண்ணாமல் துயில்கொள்ள, இறையருளால் நெற்கள் குவியல் குவியலாக நிரம்பின. குண்டையூர்கிழார் கண்டு திருவருளை வியந்து தொழுது சுந்தரருக்குச் செய்தியைக் கூறி, நெல் எடுக்க ஆட்கள் பல வேண்டுமே என்று கூறினார். சுந்தரரும், திருக்கோளிலிக்கு எழுந்தருளி திருவருளை வியந்து நெல் எடுக்க ஆள் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 10 - 22.)

குறிப்பு: இத் திருப்பதிகம் குண்டையூரிற் பெற்ற நெல்லினைத் திருவாரூருக்கு எடுப்பிக்க ஆள் வேண்டுங்கால், உலகியலை நிலை பெறுவிப்பவனும் சிவபிரானேயாதல் தோன்ற, நகைச்சுவை முறையில் அருளிச் செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 20

திருச்சிற்றம்பலம்

199.நீள நினைந்தடியேன் உனை

நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மடவா ளவள

வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டை

யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை

அட்டித் தரப்பணியே.

1



1. பொ-ரை: திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, வாள்போலுங் கண்களையுடைய மடவாளாகிய என்