200. | வண்டம ருங்குழலாள் உமை | | நங்கைஓர் பங்குடையாய் | | விண்டவர் தம்புரமூன் றெரி | | செய்தஎம் வேதியனே | | தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் | | கோளிலி எம்பெருமான் | | அண்டம தாயவனே அவை | | அட்டித் தரப்பணியே. | | 2 |
இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன். அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன்; வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். கு-ரை: "நீள" என்றது, 'கால எல்லை இன்றி' என்னும் பொருளதாய், இடைவிடாமையைக் குறித்தது. 'உமை' என்பது பாடம் அன்று. 'அவள்' பகுதிப் பொருள் விகுதி. மெலிதல் - மனந்தளர்தல். 'குண்டையூர்க்கண் பெற்றேன்' என்றது, 'அஃது என் இல்லத்திற்குச் சேய்த்தாகலின், பெற்றும் பெறாதவனாய் உள்ளேன்' எனக் குறை வெளிப்படுத்தியவாறு. மிகப் பெற்ற நெல்லினை, "சில நெல்" என்றது; குறையிரப்பால் வந்த, இளிவரல் பற்றி. "ஐய சிறிதென்னை ஊக்கி" (கலி - 37.) என்றாற்போல்வன காண்க. பதினெண் கணங்கள், முதலாகப் பலரை உடைமையின், பொதுப்பட, "பணி" என்று வேண்டினார். "குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்" என்றதனை வருகின்ற திருப்பாடலினும் இயைக்க. "ஆளிலை" என்றதனை எல்லாத் திருப்பாடல்களிலும் உய்த்துக்கொண்டுரைக்க. இது முதலாக உள்ள திருப்பாடல்களில், "உனை" என்றாற்போல ஓரசையாய் வருவன, கூன். கூன் பயின்று வருதல், இசைத்தமிழிற்கு இயல்பே. இவைகளையும் கூன் இன்றி, முன்னவைபோல ஓதுவாரும் உளர். அட்டுதல் - கொண்டுவருதல். (தமிழ் லெக்ஸிகன்). 2. பொ-ரை: வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி, 'உமை' என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே, பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே, தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில்
|