201. | பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட | | ருஞ்சடைக் கங்கை வைத்தாய் | | மாதர்நல் லார்வருத்தம் மது | | நீயும் அறிதியன்றே | | கோதில் பொழில்புடைசூழ் குண்டை | | யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் | | ஆதியே அற்புதனே அவை | | அட்டித் தரப்பணியே. | | 3 |
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, உலகெலாம் ஆகியவனே, அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; ஆதலின், அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளை யிட்டருள். கு-ரை: உமை நங்கையோர் பங்குடைமை, போக வடிவத்தையும், புரமூன்றெரித்தமை, வேகவடிவத்தையும், வேதியனாதல், யோகவடிவத்தையும் குறித்தபடியாம். "உமை நங்கையோர் பங்குடையாய்" என, 'நீயும் இல்லுடையை ஆதலின், யான் வேண்டுவதன் இன்றியமையாமை அறிகுவை' என்பதனைக் குறிப்பால் அருளினார்; இதனை, வருகின்ற திருப்பாடல்களில், வெளிப்படையாகவே அருளிச்செய்வார். 'உலகியலை நிலைபெறுவிக்கின்றவனும் நீயேயன்றோ' என்பது, இவற்றின் உள்ளீடாய பொருள், "திருக்கோளிலி எம் பெருமான்" என்பதனை, வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க. 3. பொ-ரை: திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, எல்லார்க்கும் முன்னவனே, யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே, நீ, உன் திருமேனியில் பாதியிற்றானே, 'உமை' என்னும் ஒரு மாதராளை வைத்தாய்; அதுவன்றி, விரிந்த சடையின்கண், 'கங்கை' என்னும் மற்றொரு மாதராளையும் வைத்தாய்; ஆதலின், நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே? அதனால் உன்னை வேண்டுகின்றேன்; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
|