202. | சொல்லுவ தென்உனைநான் தொண்டை | | வாய்உமை நங்கையைநீ | | புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு | | பூசல்செய் தார்உளரோ | | கொல்லை வளம்புறவிற் குண்டை | | யூர்ச்சில நெல்லுப் பெற்றேன | | அல்லல் களைந்தடியேற் கவை | | அட்டித் தரப்பணியே. | | 4 |
கு-ரை: "நீயும் அறிதியன்றே" என்றது, 'நீயும் ஓர் இல் வாழ்க்கையன் ஆதலின், அவ் வாழ்க்கையை உடைய என்னை நீ வெறுப்பாயல்லை என்று உன்னை வேண்டுகின்றேன்' என்னும் குறிப்பினை உடையது. தலைவன்முன் நின்று இவ்வாறு கூறுதலின், நகையுமாயிற்று. மேல், "உமை நங்கையோர் பங்குடையாய்" என்றதும், இனி அவ்வாறு வருவனவும் அன்ன. 4. பொ-ரை: திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது? நீ, கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய, 'உமை' என்னும் நங்கையை முன்பு மணந்து, பின்பு இடப்பாகத்திலே வைத்தாய்; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ? இல்லை ஆதலின், எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை. அடியேன், சில நெற்களை, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி, அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். கு-ரை: 'உனை' என்பது வேற்றுமை மயக்கம், கொல்லை புன்செய் நிலம். அவற்றின் வளம் வரகு முதலியன. 'வளப்புறவு' என்பது மெலித்தலாயிற்று. இது, வருகின்ற திருப்பாடலிலும், இறுதித் திருப்பாடலிலும் ஒக்கும். "குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்" என்றதனை, வருகின்ற திருப்பாடலிலும் இயைக்க.
|