பக்கம் எண் :

597
 
203.

முல்லை முறுவலுமை ஒரு

பங்குடை முக்கணனே

பல்லயர் வெண்டலையிற் பலி

கொண்டுழல் பாசுபதா

கொல்லை வளம்புறவிற் றிருக்

கோளிலி எம்பெருமான்

அல்லல் களைந்தடியேற் கவை

அட்டித் தரப்பணியே.

5

204.குரவம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்

பரவை பசிவருத்தம் மது

நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில்சூழ் குண்டை

யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

அரவம் அசைத்தவனே அவை

அட்டித் தரப்பணியே.

6



5. பொ-ரை: முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே, சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன், குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. ஆதலின் அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி, அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.

கு-ரை: அயர்தல் - செயற்படுத்துதல்; தோற்றுவித்தல். அது சிரித்தலைக் குறித்தது.

6. பொ-ரை: குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே? அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள் பாற்சேர்ப்பிக்க