பக்கம் எண் :

598
 
205.எம்பெரு மான்உனையே நினைந்

தேத்துவன் எப்பொழுதும்

வம்பம ருங்குழலாள் ஒரு

பாகம் அமர்ந்தவனே

செம்பொனின் மாளிகைசூழ் திருக்

கோளிலி எம்பெருமான்

அன்பது வாய்அடியேற் கவை

அட்டித் தரப்பணியே.

7

206.அரக்கன் முடிகரங்க ளடர்த்

திட்டஎம் மாதிப்பிரான்

பரக்கும் அரவல்குலாள் பர

வையவள் வாடுகின்றாள்



எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.

கு-ரை: "நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செயுநீர - செய்யா தமைகலா வாறு" (குறள் - 219) என்பவாகலின், பரவையார்க்குப் பசியாவது, அடியவர் முதலாயினாரை வழிபட இயலாமையேயாம் என்க. "நீயும்" என்ற உம்மை, இங்கு 'யானேயன்றி' என இறந்தது தழுவிற்று.

7. பொ-ரை: மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே, செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான்; வேறுயாரை வேண்டுவேன்! என்னிடத்து அன்புடையையாய், அவற்றை அங்குச் சேர்த்து உதவ. நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.

கு-ரை: "அன்பது" என்னும் 'அது', பகுதிப் பொருள் விகுதி. "அன்பு" அதனை உடையான்மேல் நின்றது. வருகின்ற திருப்பாடலுள். "இரக்கம்" என்பதும் அவ்வாறாம்.

8. பொ-ரை: இராவணனது தலைகளையும், கைகளையும் நெரித்திட்ட எங்கள் முதற்கடவுளே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற