பக்கம் எண் :

599
 
குரக்கினங் கள்குதிகொள் குண்டை

யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்

இரக்கம தாய்அடியேற் கவை

அட்டித் தரப்பணியே.

8

207.பண்டைய மால்பிரமன் பறந்

தும்மிடந் தும்மயர்ந்தும்

கண்டில ராய்அவர்கள் கழல்

காண்பரி தாயபிரான்

தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்

கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவனே யவை

அட்டித் தரப்பணியே.

9



எம்பெருமானே. அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள்; அவள் பொருட்டு, அடியேன், சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; நீ இரக்கமுடையையாய், அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.

கு-ரை: இராவணனை ஒறுத்தமையை அருளிச் செய்தது, இறைவனது பேராற்றலை நினைந்து.

9. பொ-ரை: முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும், ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக, இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே, தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பொருமானே, எல்லா உலகமும் ஆனவனே, அடியேன், குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.