பக்கம் எண் :

600
 
208.கொல்லை வளம்புறவிற் றிருக்

கோளிலி மேயவனை

நல்லவர் தாம்பரவுந் திரு

நாவல வூரனவன்

நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்

தேத்திய பத்தும்வல்லார்

அல்லல் களைந்துலகில் அண்டர்

வானுல காள்பவரே.

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: "பண்டையமால்பிரமன்" என இன்றுள்ளாரின் வேறு போல அருளியது அக்காலத்துக்கொண்ட முயற்சிபற்றி. இனி, அவர் தாம் இன்றுள்ளார்போல் அன்றி வேறு நிலையினராய் இருந்தனர் என்பது நயம். 'திருவடி' என்னும் ஒருமைபற்றி. "அரிது" என அருளினார். "அரிதாயபிரான்" எனச் சினைவினை முதலொடு முடிந்தது. இனி, துவ்வீறு பண்புணர்த்த, அப்பெயர், அதனை உடையான்மேல் நின்றதெனலுமாம். "ஆய்" என்றதனை 'ஆ' எனத்திரிக்க.

10. பொ-ரை: கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை, நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி, மனம் பொருந்திப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாடவல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள்.

கு-ரை: 'எம்பெருமான் யான் வேண்டின் அருளாதொழியான்' என்னுந் தெளிவினாற் பாடியன இவை என்பார். "நினைந்தேத்திய பத்து" என்று அருளினார். 'இவற்றை வல்லார்' எனவே, 'அத்தெளிவோடே இவற்றைப் பாடுதல் வல்லார்' என்றதாயிற்று. 'அண்டர்க்கு வானுலகு' என்க. அது சிவலோகம். அதனை ஆளுதலாவது, ஆண்டுள்ள தூய இன்பங்களை வேண்டியவாறே துய்த்தல். இவ்வாறன்றி "அண்டர்" என்றது, வாளா பெயராய் நின்றது எனக் கொண்டு, 'தேவரது வானுலகத்தை ஆள்பவர்' என்றுரைப்பிற் சிறவாமை யறிக.