230. | எங்கே னும்மிருந்துன் னடி | | யேன்உ னைநினைந்தால் | | அங்கே வந்தென்னொடும் முட | | னாகி நின்றருளி | | இங்கே என்வினையை யறுத் | | திட்டெ னையாளுங் | | கங்கா நாயகனே கழிப் | | பாலை மேயானே. | | 2 |
231. | ஒறுத்தாய் நின்னருளில் லடி | | யேன்பி ழைத்தனகள் | | பொறுத்தாய் எத்தனையுந் நா | | யேனைப் பொருட்படுத்துச் | | செறுத்தாய் வேலைவிடம் மறி | | யாமல் உண்டுகண்டங் | | கறுத்தாய் தண்கழனிக் கழிப் | | பாலை மேயானே. | | 3 |
2. பொ-ரை: திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன். கு-ரை: "கங்கா நாயகன்" என்றது, 'எங்கள் சிவபெருமான்' என்னும் அளவாய் நின்றது. அதன்பின், 'நீ' என்னும் எழுவாய் தொகுத்தலாயிற்று. 3. பொ-ரை: குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு
|