| | 233. | ஒழிப்பாய் என்வினையை உகப் |  |  | பாய்மு னிந்தருளித் |  |  | தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை |  |  | ஆவ ணம்முடையாய் |  |  | சுழிப்பால் கண்டடங்கச் சுழி |  |  | யேந்து மாமறுகிற் |  |  | கழிப்பா லைமருவுங் கன |  |  | லேந்து கையானே. |  |  | 5 | 
 
 | 234. | ஆர்த்தாய் ஆடரவை அரை |  |  | ஆர்பு லியதள்மேற் |  |  | போர்த்தாய் யானையின்தோல் உரி |  |  | வைபு லால்நாறக் | 
   
 5. பொ-ரை:  நீர்ச் சுழிகளை, அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே, நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின். என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய்; பின் அது காரணமாக, என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய்; பின் அது காரணமாக, என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய்; உன்னை 'இவ்வாறு செய்க' எனக் கட்டளையிடுவார் யார்? கு-ரை: பின்னர், "தெழிப்பாய்" என்றதனால், முன்னர் 'அளவளாவுவாய்' என்றமை பெறப்பட்டது. "கனலேந்து கையானே" என்பது, 'சிவபெருமானே' என்னும் பொருளதாய் நின்றது. இத்திருப்பாடலை, திருநாவுக்கரசர் அருளிச்செய்த "ஓதுவித்தாய்" என்னும் திருப்பாடலில், "நின் பணிபிழைக்கிற் புளியம்வளாரால் - மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே" (தி. 4 ப. 99 பா. 1) என்னும் பகுதியோடு வைத்து உணர்க. 6. பொ-ரை:  அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல், ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே, யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே, |