| காத்தாய் தொண்டுசெய்வார் வினை | | கள்ள வைபோகப் | | பார்த்தாய் நுற்கிடமாம் பழி | | யில்கழிப் பாலையதே. | | 6 |
235. | பருத்தாள் வன்பகட்டைப் பட | | மாகமுன் பற்றியதள் | | உரித்தாய் யானையின்தோல் உல | | கந்தொழும் உத்தமனே | | எரித்தாய் முப்புரமும் மிமை | | யோர்க ளிடர்கடியுங் | | கருத்தா தண்கழனிக் கழிப் | | பாலை மேயானே. | | 7 |
உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே. கு-ரை: "அவை, அது" பகுதிப் பொருள் விகுதிகள், 'பார்த்தானுக்கிடமாம்' என்பது பாடம் அன்று. "பழி இல்" என்றது, புகழுடைமையின் மேல் நின்றது. 7. பொ-ரை: உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள். கு-ரை: 'யானையின் தோலைப் படமாகப் பகட்டைப் பற்றி உரித்தாய்' எனக் கூட்டி, "ஆக" என்றதன்பின், 'விரும்பி' என ஒரு சொல் வருவித்து உரைக்க.
|