236. | படைத்தாய் ஞாலமெலாம் படர் | | புன்சடை யெம்பரமா | | உடைத்தாய் வேள்விதனை உமை | | யாளையொர் கூறுடையாய் | | அடர்த்தாய் வல்லரக்கன் தலை | | பத்தொடு தோள்நெரியக் | | கடற்சா ருங்கழனிக் கழிப் | | பாலை மேயானே. | | 8 |
237. | பொய்யா நாவதனாற் புகழ் | | வார்கள் மனத்தினுள்ளே | | மெய்யே நின்றெரியும் விளக் | | கேயொத்த தேவர்பிரான் | | செய்யா னுங்கரிய நிறத் | | தானுந் தெரிவரியான் | | மையார் கண்ணியொடும் மகிழ் | | வான்கழிப் பாலையதே. | | 9 |
8. பொ-ரை: விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்! கு-ரை: 'எல்லாவற்றையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் நீ' என்றபடி. 9. பொ-ரை: பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான்.
|