பக்கம் எண் :

622
 
238.பழிசே ரில்புகழான் பர

மன்ப ரமேட்டி

கழியார் செல்வமல்குங் கழிப்

பாலை மேயானைத்

தொழுவான் நாவலர்கோன் ஆ

ரூரன் உரைத்ததமிழ்

வழுவா மாலைவல்லார் வா

னோருல காள்பவரே.

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: பொய் கூறுதலாவது, மனத்தொடு படாது புகழ்தல், "தேவர் பிரான்" என்றது, 'தேவ தேவன்' என்றபடி.

10. பொ-ரை: பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர்.

கு-ரை: "சேர்" என்றது, முதனிலைத் தொழிற் பெயர். கழிக்கண் உள்ள செல்வங்கள், சங்கு, முத்து முதலியன. 'கழியார் கழிப்பாலை' என இயைத்துரைத்தலும் ஆம்.

 

சைவசமய நெறி

பிழைப்பித்தே கூற்றான் முதலைவாய்ப் பிள்ளை
அழைப்பித்தார் பாதம் நினைப் பாம்.


- மறைஞானசம்பந்தர்