24. திருமழபாடி பதிக வரலாறு: சுந்தரர் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு திருவாலம் பொழிலில் பெருமானை வணங்கித் தங்கி இரவு துயில் கொள்ளும்பொழுது பெருமான் கனவில் தோன்றி, "மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ?" என்று அருள, துயில் எழுந்து திருமழபாடி அடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12. ஏயர்கோன். புரா. 71-74) குறிப்பு: இத்திருப்பதிகம், சுவாமிகள் கனவில் இறைவர், 'நீ மழபாடியில் வருவதற்கு மறந்தாயோ?' என்று வலிய வந்து அழைத்த கருணையை நினைந்து உருகி, ஆங்கு அணைந்து அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 24 திருச்சிற்றம்பலம் 239. | பொன்னார் மேனியனே புலித் | | தோலை அரைக்கசைத்து | | மின்னார் செஞ்சடைமேல் மிளிர் | | கொன்றை யணிந்தவனே | | மன்னே மாமணியே மழ | | பாடியுள் மாணிக்கமே | | அன்னே உன்னையல்லால் இனி | | யாரை நினைக்கேனே. | | 1 |
1. பொ-ரை: பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன்? கு-ரை: 'ஒருவரையும் நினையேன்' என்பது குறிப்பெச்சம். காதல் நிலைக்களனாக வந்த உவமைக்கண், "அன்னே" எனப் பால்
|