240. | கீளார் கோவணமுந் திரு | | நீறுமெய் பூசியுன்றன் | | தாளே வந்தடைந்தேன் தலை | | வாஎனை ஏன்றுகொள்நீ | | வாளார் கண்ணிபங்கா மழ | | பாடியுள் மாணிக்கமே | | கேளா நின்னையல்லால் இனி | | யாரை நினைக்கேனே. | | 2 |
241. | எம்மான் எம்மனையென் றனக் | | கெட்டனைச் சார்வாகார் | | இம்மா யப்பிறவி பிறந் | | தேஇறந் தெய்த்தொழிந்தேன் | | மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ | | பாடியுள் மாணிக்கமே | | அம்மான் நின்னையல்லால் இனி | | யாரை நினைக்கேனே. | | 3 |
மயங்கிற்று. 'இப்பொழுது' என்றது, 'உன்னால் மெய்யுணர்வைத் தரப் பெற்ற இப்பொழுது' என்றவாறு. 2. பொ-ரை: கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள். கு-ரை: "கோவணமும்" என்புழி, 'தற்று' என்பது எஞ்சி நின்றது. 'திருநீறும்' என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. இவ்வாறன்றி, "கோவணமும்" என்ற உம்மை வேறுவினை ஒடுவின் பொருளதாய் நின்றது எனலுமாம். "பூசி" என்பது பெயர்; விளியேற்று நின்றது. 'ஆளாய் நின்னையல்லால்' எனவும் பாடம் ஓதுப. 3. பொ-ரை: மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே,
|