| | 242. | பண்டே நின்னடியேன் அடி |  |  | யாரடி யார்கட்கெல்லாம் |  |  | தொண்டே பூண்டொழிந்தேன் தொட |  |  | ராமைத் துரிசறுத்தேன் |  |  | வண்டார் பூம்பொழில்சூழ் மழ |  |  | பாடியுள் மாணிக்கமே |  |  | அண்டா நின்னையல்லால் இனி |  |  | யாரை நினைக்கேனே. |  |  | 4 | 
   | 243. | கண்ணாய் ஏழுலகுங் கருத் |  |  | தாய அருத்தமுமாய்ப் |  |  | பண்ணார் இன்றமிழாய்ப் பர |  |  | மாய பரஞ்சுடரே | 
 
 
 'என் தந்தை என் தாய்' என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார்; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன்; ஆதலின், இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன்? கு-ரை: "எம்" என்றது, தம்மைப்போல்வாரையும் உளப்படுத்தாகலின், பால் வழுவின்றென்க. 'இப்பிறவி' என இயைக்க. சுட்டு, பிறவியது இழிபினை உணர்த்திற்று. 4. பொ-ரை:  வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, வானுலகில் வாழ்பவனே, உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார், அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டு விட்டேன்; உன்னோடாயினும், உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன்; ஆதலின் இனி, யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன்? கு-ரை: "பண்டு" என்றது, தம்மை ஆட்கொண்ட காலத்தை. 5. பொ-ரை:  ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும், அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும், பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும், எல்லாப் பொருட்கும் |