பக்கம் எண் :

626
 
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

5

244.நாளார் வந்தணுகி நலி

யாமுனம் நின்றனக்கே

ஆளா வந்தடைந்தேன் அடி

யேனையும் ஏன்றுகொள்நீ

மாளா நாளருளும் மழ

பாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

6



மேலாயும் உள்ள மேலான ஒளியே, நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, தலைவனே, இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்?

கு-ரை: "உலகு" என்றது அவற்றில் உள்ள உயிர்களையும், "கண்" என்றது அறிவையும், "கருத்து" என்றது, கருதப்படுவதனையும் என்க. 'அண்ணால்' என்பது, 'அண்ணா' என மருவிற்று.

6. பொ-ரை: அடியவர்கட்கு, முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.

கு-ரை: "நாள்" என்றது, இறுதிநாளை; அதனை இழிவு தோன்ற, "நாளார்" என்று அருளினார். 'எனக்கும் இறுதி நாள் வாராமற் காப்பாய்' என்பார், "மாளா நாளருளும் மாணிக்கமே" என்று அருளினார்.