258. | பிறையா ருஞ்சடையெம் பெரு | | மானரு ளாயென்று | | முறையால் வந்தமரர் வணங் | | கும்முது குன்றர்தம்மை | | மறையார் தங்குரிசில் வயல் | | நாவலா ரூரன்சொன்ன | | இறையார் பாடல்வல்லார்க் கெளி | | தாஞ்சிவ லோகமதே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை, அந்தணர் தலைவனும், வயல்களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன், 'பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய்' என்று வேண்டிப்பாடிய, இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும். கு-ரை: "இறை" என்பது ஆகுபெயராய், இறையது அருளைக் குறித்தது. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் முன்செய்த அருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை தன்செய்ய வாயில்நகை தாராமே தாருமென மின்செய்த நூல்மார்பின் வேதியர்தாம் முதுகுன்றில் பொன்செய்த மேனியினீர் எனப்பதிகம் போற்றிசைத்து. -தி. 12 சேக்கிழார் |
|