பக்கம் எண் :

635
 
விரைசே ருங்குழலாள் பர

வையிவள் தன்முகப்பே

அரசே தந்தருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

8

257.ஏத்தா திருந்தறியேன் இமை

யோர்தனி நாயகனே

மூத்தாய் உலகுக்கெல்லா முது

குன்ற மமர்ந்தவனே

பூத்தா ருங்குழலாள் பர

வையிவள் தன்முகப்பே

கூத்தா தந்தருளாய் கொடி

யேன்இட் டளங்கெடவே.

9



நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.

கு-ரை: பதினெண்கணங்கள் இவை என்பதனை ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க. (தி. 6 ப. 77. பா. 2.) முரசினது உயர்வு தோன்றுதற் பொருட்டு, "முரசார்" என உயர்திணையாக ஓதியருளினார். வருவிக்கப்படுவதனை, 'வந்து' என்றருளினார், பான்மை வழக்கால்.

9. பொ-ரை: தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே, எல்லா உயிர்கட்கும் மூத்தவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, கூத்துடையானே, உன்னை யான் பாடாமல் இருந்தறியேன்; ஆதலின், மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.

கு-ரை: பாடாதொழிந்து தேடினமையின் தாராதொழிந்தது ஒக்கும்; பாடியபின் தாராதொழிதல் ஒவ்வாது என்பார், "ஏத்தா திருந்தறியேன் தந்தருளாய்" என்று அருளினார்.