பக்கம் எண் :

634
 
படியா ரும்மியலாள் பர

வையிவள் தன்முகப்பே

யடிகேள் தந்தருளீர் அடி

யேன்இட் டளங்கெடவே.

6

255.கொந்தண வும்பொழில்சூழ் குளிர்

மாமதில் மாளிகைமேல்

வந்தண வும்மதிசேர் சடை

மாமுது குன்றுடையாய்

பந்தண வும்விரலாள் பர

வையிவள் தன்முகப்பே

அந்தண னேயருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

7

 

256.பரசா ருங்கரவா பதி

னெண்கண முஞ்சூழ

முரசார் வந்ததிர முது

குன்ற மமர்ந்தவனே.



கு-ரை: "இரவியொடு" என்னும் எண்ணொடு ஏனையவற்றோடும் இயைந்தது. உம்மை, சிறப்பு. படி - தன்மை.

7. பொ-ரை: கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும், மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே, அந்தணனே, பந்து பொருந்திய விரலை உடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய்.

கு-ரை: மதிலும், மாளிகையும் திருமுதுகுன்றத்தின என்க. நின் தலத்தில் உள்ள மதில்கள் மாளிகைகள்தாமும் சந்திரனை முடியில் அணிந்துள்ளன எனச் சிறப்பிக்கும் முகத்தால், அவையும் சிவபிரான் போலத் தோன்றும் காட்சியின்பத்தினை வெளியிட்டருளினார்.

8. பொ-ரை: மழுப் பொருந்திய கையை யுடையவனே, பதினெண் கணங்களும் புடை சூழவும், முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, எல்லா உலகிற்கும் அரசனே,