253. | மையா ரும்மிடற்றாய் மரு | | வார்புர மூன்றெரித்த | | செய்யார் மேனியனே திக | | ழும்முது குன்றமர்ந்தாய் | | பையா ரும்மரவே ரல்கு | | லாளிவள் வாடுகின்றாள் | | ஐயா தந்தருளாய் அடி | | யேன்இட் டளங்கெடவே. | | 5 |
254. | நெடியான் நான்முகனும் மிர | | வியொடும் இந்திரனும் | | முடியால் வந்திறைஞ்ச முது | | குன்றம் அமர்ந்தவனே |
கு-ரை: "கொங்கை நல்லாள்" எனச் சினைவினை முதலொடு முடிந்தது. "குணம்" என்றது, ஏற்புழிக் கோடலால், மடத்தினை உணர்த்திற்று. "கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்" (குறள் - 575) என்பனவாகலின், "அம் கண்" என்றது, கண்ணோட்டமாயிற்று. 'அங்கணன்' என்றது, பன்மை யொருமை மயக்கம். 5. பொ-ரை: மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே, பகைவரது மூன்று ஊர்களை எரித்த, செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினையுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள்; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு, செம்பொன்னைத் தந்தருள். கு-ரை: 'செய்ய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'அரவு ஆரும் பை' என மாற்றிப் பொருள்கொள்க. 6. பொ-ரை: திருமாலும், பிரமனும், சூரியனும், இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, தலைவனே, பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும், "பரவை" என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.
|