பக்கம் எண் :

632
 
251.பத்தா பத்தர்களுக் கருள்

செய்யும் பரம்பரனே

முத்தா முக்கணனே முது

குன்ற மமர்ந்தவனே

மைத்தா ருந்தடங்கண் பர

வையிவள் வாடாமே

அத்தா தந்தருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

3

252.மங்கையொர் கூறமர்ந்தீர் மறை

நான்கும் விரித்துகந்தீர்

திங்கள் சடைக்கணிந்தீர் திக

ழும்முது குன்றமர்ந்தீர்

கொங்கைநல் லாள்பரவை குணங்

கொண்டிருந் தாள்முகப்பே

அங்கண னேயருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

4



3. பொ-ரை: எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே, அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே, இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே, மூன்று கண்களையுடையவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, என் அப்பனே, மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய. 'பரவை' என்னும் பெயரினளாகிய இவள், பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி, அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள்.

கு-ரை: 'பற்றா' என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. "மைத்து" என்றது, 'மை' என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். 'செம்பொன்னை' என்பது, முன்னைத் திருப்பாடலினின்றும் வந்து இயையும்.

4. பொ-ரை: உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே, சடையின்கண் சந்திரனை அணிந்தவரே, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, கண்ணோட்டம் உடையவரே, தனங்கள் அழகியாளும், யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும், 'பரவை' என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும்.