| மின்செய்த நுண்ணிடையாள் பர | | வையிவள் தன்முகப்பே | | என்செய்த வாறடிகேள் அடி | | யேன்இட் டளங்கெடவே. | | 1 |
250. | உம்பரும் வானவரும் முட | | னேநிற்க வேயெனக்குச் | | செம்பொனைத் தந்தருளித் திக | | ழும்முது குன்றமர்ந்தீர் | | வம்பம ருங்குழலாள் பர | | வையிவள் வாடுகின்றாள் | | எம்பெரு மான்அருளீர் அடி | | யேன்இட் டளங்கெடவே. | | 2 |
கு-ரை: "பொன்செய்த", "மின்செய்த" என்றவற்றில், 'செய்த' என்பது உவம உருபாய் நின்றது. இட்டளம் - துன்பம். 'இட்டளங்கெட என்செய்தவாறு' என்றது, 'துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு, நீர் துன்பத்தை ஆக்கினீர்' என்றபடி. இனி, 'இவள்தன் முகப்பே என் செய்தவாறு' என்றே இயைத்து, 'அருளீர்' என ஒருசொல் வருவித்து, வருகின்ற திருப்பாடல்களிற்போலவே உரைத்தலுமாம். இத் திருப்பதிகத்துள் வரும் விளிகள் பலவும், இறைவரது துன்பந் துடைக்கும் இயல்பினை விதந்து, தம் கருத்தொடு கூடிய பொருளை முடித்து நிற்பனவாதல் அறிக. 2. பொ-ரை: எம் பெருமானிரே, நீர், முன்பு, வானத்தில் உள்ள தேவர்களும், அவர்கட்குமேல் உள்ள 'அயன், மால்' என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து, விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர்; இப்பொழுது, மணம் பொருந்திய கூந்தலையுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலி கின்றாள்; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும். கு-ரை: "உம்பர்" என்றது, வானவர்க்கும் மேலிடத்து உள்ளவரை. 'பொன்' என்பதே தலைமை பற்றிச் செம்பொன்னைக் குறித்தல் வழக்காயிற்றாயினும், 'செம்பொன்' என்பதே, ஏனைக் கரும்பொன் வெண்பொன்னின் நீக்கி, அதனை வரைந்துணர்த்துவது என்க. "பெருமான்" என்பது பன்மை யொருமை மயக்கம்.
|