பக்கம் எண் :

630
 

25. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

தம்பிரான் தோழர் திருஎதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி முதலான பதிகளை வணங்கித் திருவாரூரை அடைந்து திருமூலட்டானரைத் தொழுது புறம் போந்து பரவையார் மாளிகையை அடைந்து மகிழ்ச்சியுடன் வந்தார். ஒருநாள் நம்பியாரூரர், பரவையாரை நோக்கி, 'திருமுதுகுன்றர் நமக்களித்த பொன்னை மணிமுத்தாற்றில் புகும்படி இட்டோம். அதனை இத்தலத்துத் திருக்கோயிலுக்கு மேல்பாலுள்ள கமலாலயத் திருக்குளத்தில் பெருமான் அருளால் எடுத்துக்கொண்டு வருவோம்' என்று கூறிப் பரவையாரை அழைத்துச் சென்று கமலாலயத்தின் வடகீழ்ப்புறம் உள்ள கரையின் மேல்பால் பரவையாரை நிறுத்தித் திருக்குளத்தில் இறங்கித் தேடினார். இறைவர், நம்பியாரூரர் பாட்டைப் பெற விரும்பிப் பொன்னைக் குளத்தில் வருவியா தொழிந்தருளினார். அதுபோழ்து அப்பொன்னைப் பெற விரும்பித் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றத்துப் பெருமானைப் பாடிப் பரவியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோ. புரா. 127-135)

குறிப்பு: இத்திருப்பதிகத்தின் கருத்து, திருப்பதிக வரலாற்றாலே விளங்கும்.

பண்: நட்டராகம்

பதிக எண்: 25

திருச்சிற்றம்பலம்

249.பொன்செய்த மேனியினீர் புலித்

தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும் மெரித்

தீர்முது குன்றமர்ந்தீர்

 

1. பொ-ரை: பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை அரையில் உடுத்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், 'பரவை' என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!