விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள். கு-ரை: வைதிகத் திருவேயன்றி, மன்னவர் திருவும் உடைய வராதலின், "கோன்" என்பதற்கு, 'அரசன்' என்றே உரைத்தலும் பொருந்துவதேயாம். ஏயர்கோன் கலிக்காமர் புராணம் அணைந்து திருக்கோ புரம் இறைஞ்சி | | அன்பர்சூழ உடன்புகுந்து | | பணங்கொள் அரவம் அணிந்தார்முன் | | பணிந்து வீழ்ந்து பரங்கருணைக் | | குணங்கொள் அருளின் திறம் போற்றிக் | | கொண்ட புளகத் துடனுருகிப் | | புணர்ந்த இசையால் திருப்பதிகம் | | பொன்னார் மேனி என்றெடுத்து. | 73 |
அன்னே உன்னை அல்லால்யான் | | ஆரை நினைக்கேன் எனஏத்தித் | | தன்னேர் இல்லாப் பதிகமலர் | | சாத்தித் தொழுது புறம்பணைந்து | | மன்னும் பதியில் சிலநாள்கள் | | வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து | | பொன்னிக் கரையின் இருமருங்கும் | | பணிந்து மேல்பாற் போதுவார். | 74 | - தி. 12 சேக்கிழார் |
|