247. | நெறியே நின்மலனே நெடு | | மாலயன் போற்றிசெய்யும் | | குறியே நீர்மையனே கொடி | | யேரிடை யாள்தலைவா | | மறிசேர் அங்கையனே மழ | | பாடியுள் மாணிக்கமே | | அறிவே நின்னையல்லால் இனி | | யாரை நினைக்கேனே. | | 9 |
248. | ஏரார் முப்புரமும் மெரி | | யச்சிலை தொட்டவனை | | வாரார் கொங்கையுடன் மழ | | பாடியுள் மேயவனைச் | | சீரார் நாவலர்கோன் ஆ | | ரூரன் உரைத்ததமிழ் | | பாரோர் ஏத்தவல்லார் பர | | லோகத் திருப்பாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: "சுடரோன்" என்புழி, 'முதலாக' என்பது எஞ்சி நின்றது. 9. பொ-ரை: உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே, மலத்தாற் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே, நற்பண்புடையவனே, கொடிபோலும் இடையினையுடைய உமாதேவிக்குக் கணவனே, மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன், இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? கு-ரை: உயிர்களுக்கு அறம் பாவங்களை வகுத்து நடத்துபவன் இறைவனே யாகலின், "நெறியே" என்று அருளினார். 10. பொ-ரை: அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந் தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள்
|