பக்கம் எண் :

646
 

நாதனெங் காளத்தியுள்

நாவலா ரூரன்சொன்ன

வார்வினை யாயினபோய்ப்

வார்பிழைப் பொன்றிலரே.

268.காரூ ரும்பொழில்சூழ் கண
ஆரா இன்னமுதை அணி
சீரூர் செந்தமிழ்கள் செப்பு
பேரா விண்ணுலகம் பெறு

10

திருச்சிற்றம்பலம்


என்பது, 'மற்று' என்னும் பொருள்பட வந்தது.

10. பொ-ரை: மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை, அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள், வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று, சிவலோகத்தை அடைவார்கள்; குற்றம் யாதும் இலராவர்.

கு-ரை: "கணநாதன்" என்றது, 'சிவன்' என்னும் அளவாய் நின்றது. "பேரா" என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய், பிற தேவர் உலகத்தை விலக்கிற்று. பேராமை- அழியாமை. இனி, 'பிறவாமை' எனக்கொண்டு, 'ஆண்டு அபர முத்தராய் வாழ்வார்' என்று உரைத்தலுமாம்.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

தடுக்க லாகாப் பெருங்காதல் தலைநின்றருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தார் கொண்டருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர வணைந்துபணிந்து அருளால்ஏறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி மலைமேல் மருந்தை வணங்கினார். 196


வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரஇசை
அணங்கு செண்டா டெனும்பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சே வடிபணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி
இணங்கு தொண்ட ருடன் கெழுமி இன்புற்றிருக்கும் அந்நாளில். 197

- தி. 12 சேக்கிழார்