267. | தளிர்போல் மெல்லடியாள் தனை | | யாகத் தமர்ந்தருளி | | எளிவாய் வந்தெனுள்ளம் புகு | | தவல்ல எம்பெருமான் | | களியார் வண்டறையுந் திருக் | | காளத்தி யுள்ளிருந்த | | ஒளியே யுன்னையல்லால் இனி | | யொன்று முணரேனே. | | 9 |
9. பொ-ரை: தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி, எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே, மலர்களில் களிப்புப் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கின்ற அறிவு வடிவனே, அடியேன் உன்னையன்றி மற்றொரு பொருளையும் உணர்தலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும். கு-ரை: 'எளிமை' என்பதும், 'வாய்ப்ப' என்பதும் ஈறு குறைந்து நின்றன. 'மெல்லடியாள்தனை ஆகத்து அமர்ந்தருளி என் உள்ளம் புகுத' என்றது, தாம் இறைவனை உள்கும் முறையையும், "வல்ல" என்றது, தம் உள்ளம் அதற்கு ஏலாதாகவும், அதனை ஏற்புடைத்தாக்கிய அருமையையும் அருளிச்செய்தவாறு. "மோறாந் தோரொருகால் நினை யாதிருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே" (தி. 7 ப. 21 பா. 3) "கல்லியல் மனத்தைக் கசிவித்து" (தி. 7. ப 67 பா. 5) என்றாற்போலப் பிறவிடத்தும் அருளிச்செய்வர். "கல்லைப் பிசைந்து கனியாக்கி" என்றாற் போலும் (தி. 8 திருவா. திருஅம். 5) திரு மொழிகளுள்ளும், இவ்வருமை பாராட்டப்படுதல் காண்க. 'இனி'
|